முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 4,153 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,153 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 23 நவம்பர், 2020 at 10:15 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,153 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 4,153 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,84,361 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,729 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 30 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,54,793 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 46,653 பேர் பலியாகியுள்ளனர். 81,902 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மும்பை:

மும்பையில் புதிதாக 800 பேருக்கு கரோனா தொற்று இருப்பகு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 372 பேர் குணமடைந்துள்ளனர், 14 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,76,507 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,52,499 பேர் குணமடைந்துள்ளனர், 10,687 பேர் பலியாகியுள்ளனர். 10,141 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.