நைஜீரியா, ஜம்பரா மாநிலத்தில் ஒரு மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் கடத்தப்பட்டதாக நைஜீரியா காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மசூதியின் இஸ்லாமிய சமய குரு ஒருவரும் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், மாறு வேடமிட்டு அங்குள்ளவர்களைத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் முகமது தெரிவித்தார்.
துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள வழியில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சமீபத்திய நாள்களில், நைஜீரியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.