முகப்பு
இந்தியா

ஒடிசா ஆளுநரின் மனைவி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மனைவி சுஷிலா தேவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 75.

Updated On : 23 நவம்பர், 2020 at 10:42 AM
ஒடிசா ஆளுநரின் மனைவி காலமானார்: தலைவர்கள் இரங்கல்
பகிர்:


புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மனைவி சுஷிலா தேவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.

நீண்ட நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஷிலா தேவி, நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஒடிசா ஆளுநரின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், ஒடிசா மாநில ஆளுநரின் மனைவி சுஷிலா தேவி நேற்று இரவு காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம். ஓம் சாந்தி என்று பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

மறைந்த சுஷிலா தேவி, தனது கணவர் மற்றும் நான்கு மகள்கள், மூன்று மகன்களுடன் வசித்து வந்தார்.

அவரது மறைவுக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.