தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 95 சதவீதமாக உயர்வு
தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 95.20 ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 95.20 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Advertisement
தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 602 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,64,128 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 11,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 8,942 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியானதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,433-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 1,015 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,51,468 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதத்தை தேசிய அளவோடு ஒப்பிடும்போது 93.7 சதவிகிதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.