முகப்பு
இந்தியா

தில்லியில் பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் விளக்கம்

தில்லியில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் மார்ச் 16 அன்று மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாநில நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தில்லியில் பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தற்போது வரை பள்ளிகளைத் திறப்பது குறித்த எந்தத் திட்டமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

“மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்பும் வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது" என்று ஜெயின் செய்தியாளர்களிடம் கூறினார்.

தில்லியில் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 787 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →