இந்தியா

பழங்குடிகள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்: ராகுல்

DIN

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர் கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ''இந்தியாவில் பழங்குடி மக்களும் பட்டியலினத்தவர்களும் கல்வி கற்கக் கூடாது என்பதே பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கமாக உள்ளது. 

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நிறுத்துவது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT