முகப்பு
சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் (கோப்புப்படம்)
இந்தியா

விவசாயிகள் தீவிரவாதிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர்: சஞ்சய் ரெளத்

நாட்டில் தீவிரவாதிகளைப் போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா

விவசாயிகள் தீவிரவாதிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர்: சஞ்சய் ரெளத்

நாட்டில் தீவிரவாதிகளைப் போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் (கோப்புப்படம்)
பகிர்:

நாட்டில் தீவிரவாதிகளைப் போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏராளமான விவசாயிகள் தலைநகரான தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர்.

எனினும் அவர்கள் தில்லி எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தில்லியில் புராரி திடலுக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் சாலைகளில் விவசாயிகள் உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக ஹரியாணா - பஞ்சாப் எல்லையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விவசாயிகளை விரட்டியடித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ரெளத், ''தில்லியினுள் செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டது, அவர்கள் இந்த நாட்டைச் சேராதவர்கள் என்பது போன்று உள்ளது. விவசாயிகள் தீவிரவாதிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர்.  

அவர்கள் சீக்கியர்கள் என்பதாலும் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலிருந்து வந்தவர்கள் என்பதாலும், அவ்வாறு நடத்தப்படுகின்றனர். இது விவாசாயிகளுக்கு ஏற்பட்ட அவமானம்'' என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →