இந்தியா

அருணாசலில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

DIN

அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 224 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசலில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 224 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,020-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,955 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். புதிதாக 159 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,049-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 70.34 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 4 பேர் இந்தோ - திபெத் எல்லைக் காவலர்கள், 2 பேர் அசாம் ரைபிள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த 8 பேரும், தூய்மைப் பணியாளர்கள் 3 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT