பிளாஸ்மா தானம் செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அவர் கரோனாவிலிருந்து மீண்டார்.
கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட பலர் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.
Advertisement
ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் இன்று அவர் பிளாஸ்மதா தானம் செய்தார். அப்போது கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.