முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 2 லட்சத்தை எட்டியது கரோனா பாதிப்பு 

தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 1,335 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
COVID-19 tally breaches two lakh mark in Telangana
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 1,335 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், தெலங்கானா மாநிலத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,335 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,00,611 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஒரேநாளில், எட்டு பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1,171 ஆக உள்ளது. 

அக்டோபர் 4ஆம் தேதி 36,348 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டுமொத்தமாக, சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 32,41,597 ஆகும். 

நோயிலிருந்து 1,72,388 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 27,052 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மீட்பு விகிதம் 85.96 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.