ம.பி.யில் சாலை விபத்து: 6 தொழிலாளர்கள் பலி, 24 பேர் காயம்
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வேகமாக வந்த டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 6 விவசாயத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வேகமாக வந்த டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 6 விவசாயத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர்.
சிக்ல்யா பாட்டா அருகே உள்ள இந்தூர்-அகமதாபாத் சாலையில் அதிகாலை 3 மணியளவில், வயலில் வேலையை முடித்துவிட்டு விவசாயிகள் தாண்டா கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விவசாயிகள் திரும்பிக்கொண்டிருந்த வேனின் டயர் ஒன்று பஞ்சர் ஆன நிலையில், அதை மாற்றும் பணியை டிரைவர் செய்துகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று வேல் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் திர்லா மற்றும் தார் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூடுதல் ஆட்சியர் ஷைலேந்திர சோலங்கி தெரிவித்தார்.