முகப்பு
இந்தியா

ஹாத்ரஸ் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை: தடயவியல் அறிக்கை

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று அந்த மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Updated On : 6 அக்டோபர், 2020 at 2:42 PM
ஹாத்ரஸ் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை: தடயவியல் அறிக்கை
பகிர்:


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் பலியான சம்பவத்தில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று அந்த மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை துறை அளித்த அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் இன்று உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான எந்த தடயமும் கண்டறியப்படவில்லை. கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் காயங்கள் மட்டுமே இருந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

பலியான பெண்ணின் குடும்பத்தார் மட்டுமே, அந்தப் பெண் பலாத்காரத்துக்கு உள்ளானதாகக் கூறி வரும் நிலையில், அப்பெண்ணின் உடற்கூராய்விலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதை மாநில அரசு குறிப்பிட்டிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.