மகாராஷ்டிரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Advertisement
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 132 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 24,386-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து 21,593 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2,536 காவலர்கள் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 காவலர்கள் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது.