இந்தியா

ஹாத்ரஸ்: 44 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பாஜக தலைவர் கருத்து

DIN


பராபங்கி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் பலியான அன்றே அரசியலும் ஆரம்பித்துவிட்டது.

இதில் தற்போது களம்கண்டிருப்பவர் பாஜக தலைவர் ரஞ்ஜித் பகதூர் ஸ்ரீவஸ்தவா. ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் உயர் ஜாதியைச் சேர்ந்த நால்வரும் குற்றமற்றவர்கள் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மிக மிக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருக்கும் ரஞ்ஜித் மீது 44 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. செய்தி ஊடகம் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு பேட்டியளித்த போது அவர் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபர் மீது, பலியான பெண்ணுக்கு காதல் இருந்தது. அன்றைய தினம், அந்த நபரை, பெண்தான் சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். இது பற்றிய செய்திகள் ஊடகங்களில் கூட வந்துள்ளது. இருவரும் சந்தித்த போது குடும்பத்தாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார் என்று தெரிவித்ததோடு நிற்கவில்லை.

குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நிச்சயம் குற்றமற்றவர்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும், இளமை முடிந்த பிறகே அவர்கள் வெளியே வர முடியும். அவர்களுக்கு அரசு இழப்பீடு கொடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், தேசிய மகளிர் ஆணையம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. அதோடு, அவர் எந்த ஒரு கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளவும் தகுதியற்றவர் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இது குறித்து பாஜக எம்எல்ஏ, பெண்களுக்கு கலாசாரத்தின் மதிப்பை பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கருத்துக் கூறி சமூக வலைத்தளங்களில் கடும் விமரிசனத்தை வாங்கிக் கொண்ட நிலையில், தற்போது மற்றொரு தலைவர் தனது கூற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT