இந்தியா

ஆந்திரத்தில் தொடரும் ஆன்லைன் மருத்துவக் கல்வி

IANS

கரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மேலும் சில காலம் ஆன்லைன் மருத்துவக் கல்வி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் வரும் வரை மருத்துவ மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று என்.டி.ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதேபோன்று, பிற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு நடத்தப்படும் எக்ஸ்டர்னல் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும். 

இதுகுறித்து, என்.டி.ஆர் சுகாதார பல்கலைக்கழக பதிவாளர் ஷங்கர் கூறுகையில், 

மருத்துவச் சேர்க்கை பற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால் வெளிப்படையான எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஏற்கெனவே பல பிரச்னைகள் குறித்து விவாதித்து அரசிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது.

எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் குறித்து, சேர்க்கை நேரத்தில் அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கை வெளிப்படையான முறையில் நடக்கும் என்று ஷங்கர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT