முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கரோனா தொற்று

மத்திய நிலக்கரித் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு இன்று (புதன்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 அக்டோபர், 2020 at 10:57 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM


மத்திய நிலக்கரித் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு இன்று (புதன்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாததால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளேன்."

Advertisement

கர்நாடக துணை முதல்வர் லட்சுமண் சவதியுடன் பிரகலாத் ஜோஷி நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியிருந்தார். எனவே, அவருடன் தொடர்பிலிருந்தவர்களில் கர்நாடக துணை முதல்வரும் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.