குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 
இந்தியா

தேசிய விமானப்படை தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து 

இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  88 ஆண்டுகால வரலாற்றில் வலிமையான சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது. "விமானப்படை வீரர்கள் மற்றும் நாட்டின் விமானப்படை வீரர்களின் குடும்பங்களை பெருமையுடன் மதிக்கிறோம். நமது வான் எல்லையை பாதுகாப்பதிலும், பேரழிவுகளின் போது மனிதாபிமான உதவிகளை செய்வதிலும், பேரிடர் காலங்களில் சிவில் அதிகாரிகளுக்கு உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் விமானப்படை வீரர்களின் பங்களிப்புக்காக நாடு அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது." என்றும் அடுத்த ஆண்டுகளில், அதன் உயர்தர அர்ப்பணிப்பு மற்றும் திறனை தொடர்ந்து பராமரிக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று தனது வாழ்த்து செய்தியில் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

Jailer-2 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்! | Cinema updates

இன்பமே... திவ்ய தர்ஷினி!

தேர்தல் வெற்றிக்கு ஜம்முவில் இருந்துக்கூட வாக்காளர்களைச் சேர்ப்போம்: கேரள பாஜக துணைத் தலைவர்!

SCROLL FOR NEXT