மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப்பிரதேச சிறைகளில் சிறைக்கைதிகளாக பொறியியல் பட்டதாரிகள் அதிகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் தொழில்நுட்ப திறமையுள்ள மொத்தம் 3 ஆயிரத்து 740 பேர் தங்களது குற்றச்செயல்களுக்காக சிறைக் கைதிகளாக உள்ளனர். இதில் மொத்தம் 20 சதவிகிதம் பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப திறமை உள்ள கைதிகளில் உத்தரப்பிரதேச சிறைகள் அதிகபட்சமாக முதுகலை பட்டதாரி கைதிகளைக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப திறமையுள்ள 5 ஆயிரத்து 282 கைதிகளில் 2 ஆயிரத்து 10 பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ளனர்.
இந்திய சிறைகளில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 கைதிகளில் 1.67 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகள். அவர்களில் 1.2 சதவீதம் பேர் பொறியாளர்கள்.
அதேபோல் மகாராஷ்டிரத்தில் 495 சிறைக்கைதிகளும், கர்நாடகத்தில் 362 பேரும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.