இந்தியா

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்

DIN

கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிகாரில் கடந்த 1992-93 இல் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது சாய்பாஸா (ஜாா்க்கண்ட்) கருவூலத்தில் இருந்து ரூ. 33.67 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஜாமீன் கோரி, லாலு பிரசாத் யாதவ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் லாலுவுக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

உடல்நலக்குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவ் தற்போது ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தீவன முறைகேடு தொடா்பாக சாய்பாஸா கருவூல வழக்கு உள்பட 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

தீவன மோசடி வழக்கு தொடர்பாக 2017 டிசம்பர் முதல் சிறையில் இருக்கும் லாலு, 1991 முதல் 1996 வரை முதல்வராக பணியாற்றியபோது, ​​தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.5 கோடியை மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தும்கா கருவூல வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் லாலு சிறையில்தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2000ஆம் ஆண்டில் பிகாரில் இருந்து ஜாா்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

SCROLL FOR NEXT