பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்: இளைஞர்கள் விழிப்புணர்வு
பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாளை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாளை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழச்சிகள் நடைபெற்றன.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் ஞாயிற்றுக்கிழமை நாளை கடைப்பிடிக்கப்பட உள்ளது.
அதனை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான இளைஞர்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜம்மு - காஷ்மீரில் ஆங்காங்கே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பெண்குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறி வரும் வன்முறைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.