முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 2,780 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 2,780 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 அக்டோபர், 2020 at 8:51 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM


தில்லியில் புதிதாக 2,780 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,780 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,09,339 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 29 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 5,769 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இதுவரை மொத்தம் 2,81,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21,701 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 

தில்லியில் இன்று 48,753 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,23,419 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.