தில்லி: டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மோதி நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தில்லியில் மோதி நகரிலிருந்து படேல் நகரை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது ஷாதிப்பூர் மேம்பாலம் அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து தாமதமாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.