கேரளத்தில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி
கேரளத்தில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM
கேரளத்தில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கேரளத்தில் கரோனா தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9,347 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,89,202 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் மேலும் 25 பேர் பலிகாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 8,924 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,91,798 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
தற்பேதைய நிலவரப்படி 96,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.