முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 5,930 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 5,930 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2020 at 6:54 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM


கேரளத்தில் புதிதாக 5,930 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"புதிதாக 5,930 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் நோய்த் தொற்றால் பலியாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் 48 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 86 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 4,767 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,836 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 94,388 ஆகியுள்ளது. இதுவரை மொத்தம் 1,99,634 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.