முகப்பு
இந்தியா

கரோனாவிலிருந்து மீண்டார் குடியரசு துணைத் தலைவர்

​குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2020 at 6:56 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM


குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதேசமயம், அவரின் மனைவி உஷா நாயுடுவுக்கு கரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெங்கய்ய நாயுடுவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை இன்று (திங்கள்கிழமை) கரோனா பரிசோதனை மேற்கொண்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது முடிவில் தெரியவந்துள்ளது. அவரின் மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் தொற்று பாதிப்பு இல்லை என்றே முடிவு வந்துள்ளது.

Advertisement

இதுபற்றி குடியரசு துணைத் தலைவர் செயலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வெங்கய்ய நாயுடு நல்ல உடல்நலத்துடன் உள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி விரைவில் வழக்கமான பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.