முகப்பு
இந்தியா

உ.பி.யில் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 13 அக்டோபர், 2020 at 1:38 PM
3 minor Dalit sisters injured in acid attack in UP's Gonda
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கஜல் (17), மஹிமா (12), மற்றும் சோனம் (8) ஆகிய மூவரும் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆசிட் வீசி சென்றுள்ளனர். 

காயமடைந்த சகோதரிகள் மூவரும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

மேலும், கோண்டா காவல்துறை கண்காணிப்பாளர் சைலேஷ்குமார் பாண்டே கூறுகையில், 

சிறுமிகள் மூவர் மீது ஆசிட் வீசிய நபர்கள் யார் என்பதைக் குறித்து காவல்துறையினர் தனிக்குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். 

ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அடுத்து இந்த குற்றம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.