முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: இனிப்பகத்தில் அதிகாலையில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் இனிப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் இனிப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தின் திவா பகுதியிலுள்ள இனிப்பகம் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

தீ விபத்து குறித்து பேசிய மண்டல பேரழிவு மேலாண்மைத் தலைவர் சந்தோஷ் கடம் கூறியதாவது, மோசமான சாலையின் காரணமாக தீயணைப்பு வாகனத்தின் ஹைட்ராலிக் பைப் உடைந்ததால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கடை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது என்று கூறினார். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.