இந்தியா

மகாராஷ்டிரத்தில்  இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் இன்றும் நாளையும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெற்கு மத்திய மகாராஷ்டிரா மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய மகாராஷ்டிரா மற்றும் தெற்கு கொங்கனில் கரையை கடக்கிறது. 

இதன் காரணமாக இன்றும், நாளையும், கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்  என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT