இந்தியா

உ.பி.: கடந்த 28 நாள்களில் 47% கரோனா பரவல் குறைவு

DIN

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 28 நாள்களில் 47 சதவிகிதம் கரோனா பரவல் குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

எனினும் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இம்மாதம் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 2,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 பேர் உயிரிழந்தனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 36,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,04,545 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  இதனால் குணமடைவோர் விகிதம் 90.42 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் இதுவரை 6,543 பேர் உயிரிழந்தனர். இதுவரை 4,17,383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.25 கோடி கரோனா பரிசோதனைகளை செய்த ஒரே மாநிலம் உத்தரப்பிரதேசம் என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 15 நாள்களில் 25 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ([புதன்கிழமை) மட்டும் 1.51 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT