இந்தியா

தெலங்கானா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

DIN

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகா் மற்றும் பல இடங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு இடங்களில் சுவா்கள், வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி வெள்ளபாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததாலும், வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். 

முன்னதாக வெள்ளபாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முதற்கட்டமாக ரூ.1350 கோடியை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT