இந்தியா

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 15 பேர் பலி

IANS

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் எட்டு வீரர்கள் மற்றும் ஏழு சிவில் பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தன.

இந்த சம்பவம் வியாழக்கிழமை ஒர்மாரா பகுதியில் நடந்தது. பயங்கரவாத குழுவினர் எஃப்சி, ஓஜிடிசிஎல் ஆகிய இடங்களைக் குறிவைத்து, அதி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து வாகனங்களும்  எரிக்கப்பட்டது. 

இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களைப் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த துணை ராணுவப் படையினரும் பணியாளர்களும் இணைந்து அருகிலுள்ள கடற்படைக்கு மாற்றியுள்ளனர்.

மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான தேடுதல் முயற்சி இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு பலூச் ராஜி அஜோய் சங்கர் (BRAS), மாகாணத்தின் பல தீவிரவாத அமைப்புகளின் கூட்டணி தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT