இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஒடிசா மாணவர்

DIN

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோயப் அப்தாப் 99.99 சதவிகிதத்துடன் நீட் தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோயப் அப்தாப் என்பவர் 99.99 சதவிகித மதிப்பெண்களுடன் நாட்டிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

நாடு முழுவதும் 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோ்வில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் தோ்வு நடைபெற்றது. தோ்வு எழுத இயலாமல் தவறவிட்ட மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வு புதன்கிழமை (அக்.14) நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT