முகப்பு
இந்தியா

'மத்தியப்பிரதேசத்தில் நடைபெறுவது மோசடி அரசு': கமல்நாத்

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையில் மோசடி அரசு நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
பகிர்:

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையில் மோசடி அரசு நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜைன் பகுதியில் போதைப்பொருளைக் குடித்து தொழிலாளர்கள் 14 பேர் உயிரிழந்தனர். இது குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத் சுட்டுரையில் விமர்சித்துள்ளார். 

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகான் அரசு பொறுப்பேற்றதும் மதுபான மோசடி, கடத்தல் மோசடி, குற்றச்செயல்கள், நில மோசடி, போதைப்பொருள் மோசடி என அனைத்து விதமான மோசடிகளும் மீண்டும் தலைத்தூக்கத்துவங்கியுள்ளன.

மேலும், உஜ்ஜைன் பகுதியில் போதைப்பொருளைக் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், ஜபால்பூர் பகுதியில் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளார். இதனால் தற்போது குழந்தைகள் கடத்தலும் அதிகரித்துள்ளது'' என்று கமல்நாத் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.