இந்தியா

ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி அமெரிக்க பயணம்

DIN

புது தில்லி: இந்திய ராணுவத்தின் துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி நாளை முதல் நான்கு நாள்கள் (அக்.17 முதல் 20 வரை) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கமாகும். இந்திய பசிபிக் கமாண்டின் ராணுவ கூறான அமெரிக்க ராணுவ பசிபிக் கமாண்டை தன்னுடைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்திய ராணுவத்தின் துணை தளபதி பார்வையிடுவார்.

அப்போது, அமெரிக்க ராணுவத்தின் பயிற்சி மற்றும் உபகரண வசதிகளை பார்வையிடும் லெப்டினன்ட் ஜெனரல் சைனி, அந்நாட்டின் ராணுவ தலைமை அதிகாரிகளுடன் தமது எண்ணங்களை விரிவாக பகிர்ந்து கொள்வார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்படுத்தப்பட்டிக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து 2 கூட்டுப் பயிற்சிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மேற்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT