முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 9,016 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 9,016 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2020 at 8:06 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM


கேரளத்தில் புதிதாக 9,016 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 52,067 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த முடிவு கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கேரளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 96,004 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 7,991 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,36,989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 26 பேர் கரோனாவுக்கு பலியானது உறுதியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,139 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 2,76,900 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் மருத்துவமனையில் மட்டும் 24,965 பேர் உள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.