முகப்பு
இந்தியா

கரோனா: ஆந்திரத்தில் 3,986, கர்நாடகத்தில் 7,012 பேருக்கு பாதிப்பு 

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

Updated On : 18 அக்டோபர், 2020 at 10:07 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

ஆந்திரம்: இதன்படி ஆந்திரத்தில் புதிதாக 3,986 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,83,132 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் தற்போது 36,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 7,40,229 பேர் குணமடைந்துள்ளனர், 6,429 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,012 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,65,586ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் 51 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 10,478ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 6,45,825 பேர் குணமடைந்துள்ளனர். 1,09,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.