முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,151 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,151 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 20 அக்டோபர், 2020 at 9:42 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:10 PM


மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,151 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,09,516 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7,429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 13,92,308 பேர் குணமடைந்துள்ளனர், 42,453 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

1,74,265 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை

மும்பையில் புதிதாக 1,090 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,470 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,44,262 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,14,375 பேர் குணமடைந்துள்ளனர், 18,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 9,821 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.