இந்தியா

ஹைட்ரஜன் பயன்பாட்டில் பேருந்துகளை இயக்கும் சோதனை திட்டம் தில்லியில் தொடக்கம்

DIN

ஹைட்ரஜன் கலந்த சிஎன்ஜி எரிவாயுவை அரசு பேருந்துகளில் பயன்படுத்தும் சோதனை திட்டத்தை தில்லி அரசு செவ்வாய்க்கிழமை தொடக்கி உள்ளது.

ஹைட்ரஜன் இயற்கை வாகன எரிவாயு (எச்சிஎன்ஜி) உற்பத்தி நிலையத்தை ராஜ்காட்டில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்தா் பிரதான், தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

இந்தியன் ஆயல் நிறுவனமும் தில்லி போக்குவரத்து நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள இந்த தொழிற்சாலையில் தினமும் நான்கு டன் எச்சிஎன்ஜி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்காக தில்லி போக்குவரத்து துறை ரூ. 15 கோடியை வழங்கியுள்ளது. இதுகுறித்து தில்லி அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில், ‘தில்லியில் உள்ள50 பிஎஸ்-4 பேருந்துகளில் சோதனை முயற்சியில் ஆறு மாதங்களுக்கு எச்சிஎன்ஜி எரிவாயு பயன்படுத்தப்படும். இதன் மூலம் 70 சதவீதம் காா்பன் மோனாக்சைடு வெளியேற்றம் குறைக்கப்படும். 3 முதல் 4 சதவீதம் எரிபொருளும் மிச்சமாகும். மின்சாரம், எச்சிஎன்ஜி எரிவாயு ஆகியவற்றைப் பயன்படுத்தி தில்லியின் காற்று மாசுவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சோதனை திட்டம் வெற்றி பெற்றால் அடுத்தகட்டமாக எச்சிஎன்ஜி எரிவாயுவை தனியாா் வாகனங்களுக்கும் நீட்டிக்கப்படும்’ என்றாா்.

எச்சிஎன்ஜி எரிவாயுவை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் என மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த செப்டம்பா் மாதம் அறிவித்திருந்தது.

தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டீசல், எல்பிஜி, எரிவாயு ஆகியவற்றுக்கு மாற்றாக எச்சிஎன்ஜி எரிவாயுவை பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் பொருளாதாரத்துக்கு இது முதல்படியாகும். தில்லியில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அரசு பேருந்துகளை எச்சிஎன்ஜி எரிவாயுவில் இயக்க சிறிய மாற்றம் செய்தால் போதும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT