ஜம்மு-காஷ்மீர்: தினசரிக் கூலித்தொழிலாளர்கள் போராட்டம்
ஜம்மு-காஷ்மீரில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் தினசரி கூலிகள் தங்கள் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் தினசரி கூலிகள் தங்கள் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஊரக வளர்சித்துறையின் கீழ் பணிபுரியும் கூலித்தொழிலாளர்கள் தங்கள் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே இதனை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் லால் மண்டியில் உள்ள இயக்குநரகம் அலுவலக வளாகத்திற்குள் கூடி நீதி வேண்டி கோஷங்களை முழக்கமிட்டனர்.
எங்கள் சேவைகளை முறைப்படுத்துவதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் முறையாக நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். ஆனால் இது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.