முகப்பு
இந்தியா

காவலர்களுக்கு கரோனா: 26 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (கோப்புப்படம்)
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என முன்களப் பணியாளர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70  காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த காவலர்களின் எண்ணிக்கை 25,988-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,771 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 23,945 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 272-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.