முகப்பு
இந்தியா

ஊதியம் வழங்கக்கோரி தில்லி மருத்துவர்கள் போராட்டம்

நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
பகிர்:

நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தில்லி மெடிக்கல் கவுன்சிலின் கீழ் வரும் இந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூர்பா மருத்துவமனை மற்றும் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், சம்பள நிலுவைத் தொகையை வழங்கக்கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்திய அணிவகுப்பும் நடைபெற்றது. 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, 'இந்தப் பிரச்னையை எழுப்புவதில் நாங்கள் மிகவும் சோர்வடைந்து விட்டோம். போராட்டம் நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. நாங்கள் இந்நேரத்தில் மருத்துவமனைகளில் இருந்திருக்க வேண்டும். ஆனால், சம்பளத்தைப் பெற போராட்டத்தின் மூலமாக அழுத்தம் கொடுப்பதைத்தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எங்களுக்கு ஊதியம் கிடைக்க வேண்டும். அது எங்கள் அடிப்படை உரிமை" என்று இந்து ராவ் மருத்துவமனையின் ஆர்.டி.ஏ.யின் தலைவர் அபிமன்யு சர்தானா கூறினார். சிலர் இன்று முதல் இதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ஈடுபடத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்து ராவ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், தங்களுக்கான 3 மாத சம்பளத்தை வழங்கக்கோரி கடந்த பல நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →