முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 69 காவலர்களுக்கு கரோனா: மொத்த பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியது

மகாராஷ்டிரத்தில் மேலும் 69 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 23 அக்டோபர், 2020 at 3:52 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:12 PM

மகாராஷ்டிரத்தில் மேலும் 69 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம்தான் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 16 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மேலும் 69 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் கரோனா பாதித்த காவலர்களின் மொத்த எண்ணிக்கை  26,057 ஆக உயர்ந்துள்ளது. எனினும் அவர்களில் 24,053 குணமடைந்துவிட்டனர். 1,730 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவுக்கு 274 காவலர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.