இந்தியா

“கர்நாடகத்திற்கு கரோனா தடுப்பூசி இலவசம் கிடையாதா?”: பாஜகவை சாடிய சித்தராமையா

DIN

கர்நாடகத்தில் தற்போது பொதுத்தேர்தல் இல்லாததால் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி கிடையாதா? என பாஜகவை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

நடைபெற உள்ள பிகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் பிகாரில் வென்றால் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை வழங்கும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசியை வைத்து பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா.  “கர்நாடகத்தில் பொதுத்தேர்தல் இல்லாததால் பாஜக அரசு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்காதா?” என விமர்சித்துள்ளார்.

மேலும், “முதலமைச்சர் எடியூரப்பா கர்நாடக மாநில மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை அறிவிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

"இலவச கரோனா தடுப்பூசி விநியோகம் என்பது பிகாரில் தேர்தல் முடிவைப் பொறுத்தது என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இதைப் பற்றி என்ன சொல்கிறார்?. கர்நாடகாவிற்கு இலவசமாக கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு மாநிலத்தைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு முதுகெலும்பு இருப்பதாக நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT