இந்தியா

தில்லி: காற்று மாசுக்கு எதிரான பிரசாரத்திற்கு மக்கள் வரவேற்பு

DIN

தில்லியில் காற்று மாசுக்கு எதிரான பிரசாரத்திற்கு மக்கள் வெகுவாக வரவேற்பு தெரிவித்துள்ளதாக சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனங்களை அணைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தில்லி அரசு தொடக்கியுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்களாக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தை சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராய் கவுன்சிலர்களுடன் வந்து பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர், இந்த விழிப்புணர்வு பிரசாரம் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அக்டோபர் 26-ஆம் தேதி 70 தொகுதிகளுக்கு கொண்டு சேர்க்கப்படும். நவம்பர் 2-ஆம் தேதிக்குள் 272 பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசின் இந்த விழிப்புணர்வு பிரசார்த்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். பொதுமக்களும் ஆர்வமுடன்  விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT