தில்லி: ஊதியம் வழங்கக்கோரி மருத்துவர்கள் உண்ணாவிரதம்
நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தில்லி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தில்லி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி மெடிக்கல் கவுன்சிலின் கீழ் வரும் இந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூரிபா மருத்துவமனை மற்றும் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கடிதம் மூலம் மருத்துவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மாத ஊதியத்தையாவது வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மெழுகுவர்த்தி ஏந்தியும், பேரணி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஊதியம் வழங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.