முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 4,116 பேருக்கு கரோனா

​தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,116 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:


தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,116 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 4,116 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,52,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,614 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,19,828 பேர் குணமடைந்துள்ளனர், 6,225 பேர் பலியாகியுள்ளனர். 26,467 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இன்று 55,461 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 43,15,339 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →