இந்தியா

'எல்லைப் பதற்றம் முடிவுக்கு வர வேண்டும்'

DIN

இந்தோ - சீனா எல்லையில் நிலவிவரும் பதற்றம் முடிவுக்கு வரவேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின்னர் ஆயுத பூஜையையொட்டி ராணுவ வீரர்களுடன் ஆயுத வழிபாட்டிலும் ஈடுபட்டார். 

பின்னர் துப்பாக்கிகளை பரிசோதனை செய்த ராஜ்நாத் சிங்கிற்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளின் செயல்பாடு குறித்து விளக்கினர்.

பின்னர் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் மற்றும் அமைதி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. மேலும் எங்கள் நிலத்தில் ஒரு அங்குலம் கூட எவரையும் எடுக்க ராணுவம் அனுமதிக்காது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT