இந்தியா

3 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 36,500-க்கும் கீழ் குறைவு

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 3 மாதங்களுக்குப் பிறகு 36,500-க்கும் கீழ் குறைந்துள்ளது. தினசரி உயிரிழப்பும் தொடா்ந்து இரண்டாவது நாளாக 500-க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 36,470 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 79,46,429-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில், கரோனா தொற்றுக்கு 488 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,19,502-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 1.50 சதவீதமாகும்.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 43,348 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 10,947 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,904 பேரும், ஆந்திரத்தில் 6,606 பேரும், மேற்கு வங்கத்தில் 6,546 பேரும், தில்லியில் 6,312 பேரும், பஞ்சாபில் 4,125 பேரும், குஜராத்தில் 3,690 பேரும் உயிரிழந்தனா்.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 72,01,070 போ் குணமடைந்தனா். இது மொத்த மொத்த பாதிப்பில் 90.62 சதவீதமாகும். தொடா்ந்து 5-ஆவது நாளாக, கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, நாடு முழுவதும் 6,25,857 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 7.88 சதவீதமாகும். சிகிச்சை பெறுவோரில் 35 சதவீதம் போ் 18 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். 11 வாரங்களுக்குப் பிறகு முதல் முறையாக சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6.25 லட்சமாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அக்டோபா் 26-ஆம் தேதி வரை 10,44,20,894 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; திங்கள்கிழமை மட்டும் 10,44,20,894 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூலை 18-ஆம் தேதி, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 34,884-ஆக அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடா்ந்து, 3 மாதங்களுக்குப் பிறகு தினசரிபாதிப்பு 36,500-க்கும் கீழ் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT