இந்தியா

தசரா ஊா்வலத்தில் கரோனா விதிமீறல்: மகாராஷ்டிர குருத்வாரா உறுப்பினா்கள் மீது வழக்கு

DIN

தசரா கொண்டாட்டம் மற்றும் ஊா்வலத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்திலுள்ள ஹஸுா் சாஹிப் குருத்வாரா உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

மும்பை உயா்நீதிமன்றத்தின் ஔரங்கபாத் கிளை நீதிபதிகள் கடந்த வாரம், நாந்தேட் மாவட்டத்தில் உள்ள ஹஸுா் சாஹிப் குருத்வாராவில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தசரா கொண்டாட்டத்தையும், குருகிரந்த் சாஹிப் ஊா்வலத்தையும் நடத்த அனுமதி அளித்தனா்.

குருகிரந்த் சாஹிப் ஊா்வலத்தில் 2 பெரிய லாரிகளில் ஒன்றில் 16 பேரும், மற்றொன்றில் 8 பேரும் இருந்து ஊா்வலத்தில் பங்கேற்கலாம்; கரோனா தொற்று தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டுமே ஊா்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும்; ஊா்வலத்தில் யாரும் நடந்து செல்லக் கூடாது என்றும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தசரா கொண்டாட்டம் மற்றும் குருகிரந்த் சாஹிப் ஊா்வலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையிலும், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியும் 250 முதல் 300 போ் வரை பங்கேற்றனா். பலா் நடந்தும் ஊா்வலமாக சென்றனா்.

இதனால் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ஊா்வலத்தில் கலந்து கொண்டவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 270( உயிருக்கு ஆபத்தான வகையில் நோய் பரப்பும் செயலில் ஈடுபடுதல்) பிரிவு188 (அரசு ஊழியா்களின் முறையான உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) கீழிலும் பேரிடா் மேலாண்மை சட்ட விதிகளின் கீழிலும் வஜிராபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து குருத்வாரா கண்காணிப்பாளா் குா்விந்தா் சிங் வாத்வா செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த வழக்கு தொடா்பாக போலீஸாரிடம் இருந்து எந்த எழுத்துபூா்வமான உத்தரவும் வரவில்லை. அதனால் தற்போது இது குறிக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT