இந்தியா

படேல் சிலையைக் காண நவம்பர் 1 வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

DIN

வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் வருகையால் குஜராத்தில் உள்ள படேல் சிலையைக் காண சுற்றுலாப்பயணிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் 182 அடி உயரத்தில் சா்தாா் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஒற்றுமை சிலை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

கரோனா தொற்றால் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சிலை அக்டோபர் 17  முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வல்லபாய் படேலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதனையடுத்து அக்டோபர் 27 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை படேல் சிலையைக் காண சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஒருவா் பலி

பரிபூரண விநாயகா் கோயிலில் நாளை குடமுழுக்கு

மேற்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: ஒருவா் கொலை

இந்திய இருபால் இணைகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

SCROLL FOR NEXT